Posts

Showing posts from March, 2018

தமிழ்நாட்டின் சேவல் சண்டை, அதன் வகைகள் Tamil nadu seval sandai and its types

Image
சேவல் சண்டை       தமிழக மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. சேவல் சண்டையானது, சேவல் கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை,  என வெவ்வேறு இடத்துக்கு ஏற்ப வெவ்வேறு விதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ அதே போல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.    பொதுவாகவே சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோ இருக்கும்.      அதனால் அவற்றை  சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கடிினம் இல்லை  சண்டை பயிற்சியோடு சில கடுமையான  உடற்பயிற்சிகளும் சேவலுக்கு கொடுக்கப்படுகிறது. இதே போல இரையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வழக்கமான உணவை விட உடலை வலுப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ